தமிழர் நிலத்தினை ஆக்கிரமித்து
புத்தர் சிலைகளை நட்டால்!
இலங்கை ஒரு அழகிய தீவு, இதை தென்கிழக்கு ஆசியாவின் முத்து என்றும் வர்ணிப்பர். இந்து சமுத்திரப ;பிராந்தியத்தில் ஒளிரும் முத்தாக இருக்கும் இலங்கைத்தீவை இருட்டாக்கி வருபவர்கள் ஆட்சியாளர்கள் என்பதும் மறுக்கமுடியாத உன்மையே.
இரு மொழிகள் நான்கு மதங்களைக்கொண்ட நாடு என்ற போதிலும் புத்தர் சிலைகளை நட்டு நில ஆக்கிரமித்து தமிழின அழிப்பை செய்து மகிழ்ந்து வரும் ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களால் இலங்கைத்தீவை முன்னேற்றி இங்கு வாழும் அனைத்து மக்களையும் நிம்மதியாக வாழவிடாமல் செய்து கொண்டிருப்பவர்கள் சிங்கள பவுத்த மதவெறியர்கள் அடங்கிய அரசியல்வாதிகள் தான்.
இதனால் பாகுபாடு இன்றி அங்குவாழும் அனைத்து மக்களுமே பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றார்கள் என்பதை உணராமல் ஒரு துண்டு தமிழர்களின் பாரம்பரிய நிலத்தை ஆக்கிரமிப்பதிலேயே மகிழ்வுகொள்ளுகின்றார்கள். இல்ஙகைத்தீவை சிங்கள பவுத்த தீவாக மாற்றவேண்டும் என்று முனைப்புடன் செயற்படும் ஆதிக்க சக்திகளுக்கு யார் செத்தாலென்ன யார் வாழ்ந்தாலென்ன என்ற மன நிலைதான்.
Read More
விமானம் தொடர்....33
'என்னையா வரச் சொன்னனீங்கள்' என்று சாந்தினி கேட்க 'உன்னைத்தான் 'என்று மகேஸ்வரி சொல்லிக் கொண்டே எட்டிச் சென்று 'சாந்தினியின் கையைப் பிடிக்க, சாந்தினி தாயைப் பார்க்க,தாய் போ என முகசாடை காட்டுகின்றாள்.
மகேஸ்வரி தனக்கருகிலேயே அவளை அணைத்தபடி நிற்க, சாந்தினி கடைக்கணணால் சிவகாமியைப் பார்க்கிறாள்.மகேஸ்வரியைப் பார்த்து சாந்தினி' உங்களை மாமி என்று கூப்பிடவா என்கிறாள்.'தாராளமாகக் கூப்பிடு என்கிறாள்' மகேஸ்வரி.'மாமி சின்னண்ணா சொன்னவன் நீங்கள் நல்லாய் உருசியாய் சமைப்பியளாம், ஒரு நாளைக்கு உங்கடை வீட்டை சாப்பிட வரட்டா' என்று அவள் சாந்தினி கேட்கிறாள்.
Read More
யேர்மனியில் புதிய அரசு பதவியேற்பு
கடந்த 16 ஆண்டுகள் யேர்மனியை
ஆட்சிசெய்தவரும் உலகின் புகழ் மிக்க
தலைவராகவும் விளங்கிய ஏஞ்சலா
மேர்கல் 08.12.2021 விடைபெற புதிய
ஆட்சித்தலைவராக யேர்மனியின் 9வது
அதிபராக ஒல்வ் சொல்ஸ் (ழுடயக ளுஉhழடண)
பதவி ஏற்றார். இவர் ளுPனு கட்சியைச்
சேர்ந்த 4வது கான்சிலர் என்பதும்
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Read More
வெளிநாட்டவர்களுக்கு
சலுகைகளை வழங்கும் புதிய அரசு
16 ஆண்டுகள் ஜேர்மன் சேன்ஸலராக பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகியதைத் தொடர்ந்து, ழுடயக ளுஉhழடண என்பவர் ஜேர்மனியின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக சேன்ஸலர் பொறுப்பேற்றுக்கொண்ட ளுஉhழடண, அவர்கள் 15.12.2021 ஜேர்மன் நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையின் போது ஆடுத்த நான்கு ஆண்டுகளில் புதிய அரசு என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற உள்ளது என்பது குறித்து விவரித்தார். ஆந்தஉரையில் குறிப்பிட்டுள் சில விடயங்கள் வெளிநாடுகளில் இருந்து அடைக்கலம் பெற்றுக்கொண்டவர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. Read More
ஏவுகணை மூலம்; விண்வெளி செயற்கைக் கோளை தாக்கிய ரஷ்யா?
கடந்த 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் முதல் முறையாக 'ஸ்புட்னிக்-1' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தியது. அன்று தொடங்கி தற்போது வரை நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை உலக நாடுகள் விண்வெளிக்கு அனுப்பியுள்ளன.
தகவல் தொடர்பு, இணைய சேவை, ஜி.பி.எஸ்., வானிலை முன்னறிவிப்பு என பல்வேறு தேவைகளுக்காக உதவும் இந்த செயற்கைக்கோள்கள், குறிப்பிட்ட காலத்தில் செயலிழந்து விடுகின்றன. இவ்வாறு செயலிழந்த செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் விண்வெளியிலேயே மிதந்து கொண்டிருக்கும். ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வெடிக்கவைத்து அழித்துவிடும், Read More
அம்மாவின் உலகம் இதழ். 13...
வயிறுகளும் காய்ந்த காலமது.......
காலச்சக்கரம் மிக அழகாக ஓடிக் கொண்டேஇருக்கிறது. மனிதர்களாகிய நாம் தான் ஓடுவதும், விழுவதும், எழுவதுமாக தடுமாறிக்கிடக்கிறோம். குhலமாகி விட்ட எங்கள் அம்மாவும்84ஆண்டுகாலவாழ்வில் எத்தனை தடவை விழுந்திருப்பா மீண்டும் எழுந்திருந்தா.எண்ணிக்கணக்கிட எனக்கென்ன தெரியும்.நான் அம்மாவுடன் சேர்ந்திருந்தகாலம் 29ஆண்டுகள் மட்டுமே.நானும்சில தடவை தடாலென சரிந்தேன்,
ஆனாலும்தைரியமாக எழுந்தே நிற்கிறேன்.அம்மாவின் உலகில் விழுந்தபோது தூக்கிவிடவும் எழுந்துவிட்டார் என தைரியம் சொல்லவும் சிலமனிதர்கள் கூட இருந்தார்கள்,அவர்களை நான் மறந்துவிடவில்லை. Read More
ஆயிரம் வருடத்தில் மிக நீளமான சந்திர கிரகணம்
1000 வருடங்களில் நிகழ்ந்திடாத வகையில் நீண்ட நேரம் நீடித்து நிகழும் பூமியின் மிக நீண்ட நேரச் சந்திர கிரகணம் 19.11.2021 அன்று நிகழ்ந்துள்ளது. இதுவரை 1000 வருடங்களில் நிகழ்ந்திடாத மிக நீளமான சந்திர கிரகணம் இது என்றும் கூறப்பட்டுள்ளது.
பூமியின் மிக நீளமான சந்திர கிரகணம் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது தான் சந்திர கிரகணம் என்ற இந்த நிகழ்வு நிகழ்கிறது. இந்த நிகழ்வு நடைபெறும் சந்திர கிரகணத்தின் மொத்த கால அளவு 3 மணி நேரம் 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் ஆகும். இது பார்ட்சியல் எக்லிப்ஸ் (Pயசவயைட நுஉடipளந) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பார்ட்சியல் எக்லிப்ஸ் என்பது நிலவின் முழு பகுதியில், ஒரு சிறிய பகுதி மட்டும் கிரகணத்தால் மறைக்கப்படாமல் இருப்பதாகும்.Read More
..........