ஒரே நாடு ஒரே சட்டம்.
காவியுடை தரித்து மொட்டை அடித்த ஆண்மீக வாதிகள் எனும் போர்வையில் வளர்த்தெடுக்கப்படும் அடாவடித் துறவிகள்தான் அரசின் ஆக்கிமிப்பு முகவர்களாகச் செயற்பட்டு அடாவடி செய்து புத்தர் சிலைகளை நட்டு நிலம் பறிப்பவர்கள். இவர்களை வைத்து தமிழர்களை எதிர்த்து நில ஆக்கிரமிப்புச் செய்து, சிங்கள மக்களை உசுப்பேத்தும் பேச்சுக்களை பேசி தமக்கான வாக்கு வங்கியை வைத்திருக்கும் சிங்களத்தலைமைகள் தமிழர்களை அழிப்பதிலேயே கவனம் செலுத்திவருகின்றனர். இதுவே இலங்கைத்தீவின் சாபக்கேடாகவும் இருக்கின்றது.
இன்று சிறிலங்கா பவுத்த மதவெறி ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் வகுக்கப்பட்ட திட்டங்களும் தோல்வியைத்தழுவிய நிலையில் ஆட்டம் கண்டு வருவதாகவே அறியமுடிகின்றது. அவர்கள் தொடர்ந்தும் தமிழர் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தாலும் அடித்தட்டு மக்கள் அரிசி பருப்பு, பாண் போன்ற அண்றாட உணவுகளுக்கே அல்லாடவேண்டியவர்களாக ஆக்கப்பட்டுவருகின்றர்கள்.
நூறு ரூபாய் விற்ற அரசி ஐநூறு ரூபாய்க்கு அதிகரிக்கும் எனும் எச்சரிக்கை விடும் நிலைக்கு நாடு வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுவருகின்றது. ஏற்கனவே கொரோனா பரவலைக் கட்டுப்டுத்தத்தவறிய நிலையில் போராடிக்கொண்டிருக்கும் போது. பஞ்சமும் பட்டினியும் ஆரம்பமாகினால் இன்னொரு ஆப்கானிஸ்தானாக மாற வாய்ப்புள்ளதாகவே பல வல்லுனர்களும் இலங்கைஅரசை எச்சரித்து வருகின்றனர்.
சீனாவிடம் வாங்கிள கடனுக்காக விற்கக்கூடியவற்றையெல்லாம் விற்றுவிட்டால், அல்லது சீனா தன் ஆக்கிரமிப்புக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டு தன் இருப்பின் நிலையினை உறுதிப்படுத்திவிட்டால் தொடர்ந்தும் கடன் வழங்குவதற்கு தயாராக இருக்காது. போக மேலும் மேலும் கடன் கொடுத்தால் முழு இலங்கைத்தீவையுமே ஆக்கிரமிக்கும் நிலைக்கு சென்றுவிடும்.
சீனாவை அண்டிவாழும் இராஐபக்சர்கள் குடும்பத்திற்கு இது சாதாரணமாகத் தெரிந்தாலும் தமிழர்களை விரட்டியடித்து ஆக்கிரமிக்கும் நிலங்களை சீனாவிடம் கையளித்து சீனாலங்காவாக மாற்றுவதை ஆக்கிரமிப்பு செயயும் துறவிகள் உட்பட சில சிங்கள் தேசியவாதிகளும் விரும்பவில்லை என்றே அறியமுடிகின்றது. சீனா ஆக்கிரமிப்பை எதிர்ப்பவகளுக்கு எதிர்க்கட்சியும் ஆரதவு தருவதனால் இன்று தினம் ஒரு பேராட்டமாக தென்னிலங்கை மாறிவருகின்றதை அறிகின்றோம்.
இதனால் இராஐபக்ஸர்கள் குடும்பத்தினை எதிர்ப்பவர்களை அடக்குவதற்கு மீண்டும் இராணுவ இயந்திரத்தினை கட்டவிழ்த்து விடவும் கோத்தபாய தயாராகவே இருக்கின்றார். ஆட்சியாளர்கள் எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை பற்றிய காரணங்களையும் தீர்வுகளையும் தேடாமல் அடக்கி ஒடுக்குவதிலேயே முனைப்புக்காட்டுவதனால் நாடு விரைவாக வறுமையை நோக்கி நகரும் என்பதை உணராமல் அரசியல் செய்வது மக்களுக்கு நன்மையையே தராது.
ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய சிந்தனைகளால் நாடு வறுமையை நோக்கிச் செல்ல , அவர்கள் தமிழர்களை எதிர்ப்பதையும் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து இலங்கைத்தீவை சிங்கள மயமாக்குவதிலுமே குறியாக இருக்கின்றார்கள். அதற்காக அனைத்துலகம் உட்பட யாரையும் எதிர்க்கவும் தயாராக இருக்கின்றார்கள். இப்படியே போனால் இலங்கைத்திவின் எதிர்காலம் என்னவாகுமோ?
யேர்மனியில் புதிய அரசு பதவியேற்பு
உலகில் வளம்;மிக்க நாடு. ஐரேப்பாவில் முன்னணிநாடு என்று புகழ்பெற்ற ஜேர்மனி நாட்டின் புதிய சேன்ஸலராக் ஒல்வ் சொல்ஸ் தெரிவுசெய்யப்பட்டார். கடந்த 26.09.20121 இந்தநாட்டின் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத காரணத்தால் அரசமைக்கமுடியாத இழுபறி நிலை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக நிலவிவந்த பேச்சுவார்த்தையின் பலனாக மூன்று கட்சிகளான ளுPனு, புசநநn Pயசவல, குனுP ஒன்றுசேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளன. யேர்மனிய அரசியல் வரலாற்றில் மூன்று கட்சிகள் சேர்ந்து அரசமைத்தது இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். யேர்மனியின் புதிய சேன்ஸலராக ளு.P.னு கட்சியைச்சேர்ந்த ஒல்வ் சொல்ஸ் (ழுடயக ளுஉhழடண) இன்று தலைநகர் பேர்ளினிலுள்ள பாராளுமன்றத்தில் அதிகார முறைப்படி பதவி ஏற்றார். இவருடன் புதிய மந்திரிசபையும் மூன்று கட்சிகளிலிருந்தும் தெரிவு செயயப்பட்டனர். புதிய சேன்ஸலரைப் பற்றிய சிறுகுறிப்பு.. 14.06.1958ல்பிறந்தவருக்கு தற்போது 63 வயது. 'ஒஸ்னாபுறூக்' என்ற இடத்தில் பிறந்தவர். தற்போது 'போஸ்டம்' என்ற நகரில் மனைவி டீசவைவய நுசளெவ வாழ்ந்து வருகின்றார். 'கம்பேர்க்' பலகலைக் கழகத்தில் சட்டத்தரணியாகப் படித்துப் பட்டம் பெற்றார். 1975ம் ஆண்டு அரசியலில் பிரவேசித்தார். தற்போது 46 வருடங்கள் அனுபவம் கொண்டவர். கம்பேர்க் மாநகர மேஜராக 2011 - 2018 வரை இருந்திருக்கிறார். 1998ல் பாராளுமன்ற பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். தொழில், சமூக நலத்துறை அமைச்சராக இருந்ததுடன் அங்கலா மேர்க்கலின் இறுதி நான்கு வருட அரசில் 2018 - 2021 வரை உதவிக் கான்சிலராகவும் நிதிமந்திரியாகவும் பதவி வகித்தவர். படிப்படியாக உயர்ந்து தற்போது ஜேர்மனியின் அரசியல்அதிகாரம் கூடிய பதவியான கான்சிலர் பதவியை ஏற்றுள்ளார். புதிய அதிபரை வாழ்த்துவோம். ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலின் அரசியல்; முடிவுக்கு வருகிறது...கிழக்கு ஜேர்மனியில், ஒரு போதகரின் மகளாக பிறந்தவர் ஏஞ்சலா. பின்னர் ஒரு இயற்பியலாளாராகி, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபின் அரசியல் வாழ்வில் கால் எடுத்துவைத்தார் அவர். ர்நடஅரவ முழாட என்பவர் ஜேர்மன் சேன்ஸலராக இருக்கும்போது, அவரது அமைச்சரவையில் கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் யாருமில்லை என்பதற்காக, அந்த இடத்தை நிரப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏஞ்சலா. அப்போது, அவர் ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராவார் அவர் மகளிர் மற்றும் இளைஞர் நல அமைச்சராக பொறுப்பேற்றார். ஐரோப்பா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவிய ஏஞ்சலாவின் புகழ், அவர் சிரிய நாட்டு அகதிகளுக்கு தன் நாட்டைத் திறந்துவிட்டபோது உலக அளவில் பெரிதும் பேசப்பட்டது. ஆனால், ஜேர்மனியிலோ அதற்கு எதிர்ப்பு உருவானது. அதுபோக, கொரோனா பரவத் தொடங்க, முதலில் எல்லா நாடுகளை விடவும் சாமர்த்தியமாக அதைக் கையாண்டார். ஜேர்மனியில் பிறகு கொரோனா பரவல் கைமீறிப்போக, அத்துடன் ஆடி மாதம் பெருவெள்ளம் ஒன்று வந்தபோது அதை சரியாக அரசு கையாளவில்லை என மக்கள் கோபமடைய, அவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக தனது 16 ஆண்டு கால ஜேர்மன் சேன்ஸலர் பதவியையும், கட்சித் தலைமைப் பொறுப்பையும் துறக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார் ஏஞ்சலா. அதன்படி, இந்த ஆண்டு இறுதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. 30 ஆண்டு கால அரசியல் வாழ்வுக்குப் பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டால், கொஞ்சம் படிக்கவேண்டும், கொஞ்சம் தூங்கவேண்டும் என்கிறார் அந்த இரும்புப் பெண்மணி. நன்றியுணர்வோடு அவருக்கு ஓய்வு கொடுபபோம். .